ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மனிதம்

மறித்திட்ட மானுடத்தினுடன்
மலர்ந்துள்ள மனிதராய் நாம்
மனம் தனில் அன்பின்றேல்
மறித்தவராய் மண்ணுலகினிலே...

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

இருப்பும் இல்லாமையும்

இருப்பதினுளில்லாமையும் உண்டோ
இல்லாமையினுள் இருப்புமுண்டோ
இருப்பதாலில்லாமையும் இல்லை
இல்லாமையாலிருப்பும் இல்லை

குறையும் நிறையும்

குறைவின்றி  நிறையேது
நிறையெனின் குறையேது
குறைவாகின் நிறையாகிட துடித்திடுமே
நிறைவாகின் நிலையாகவே நின்றிடுமே


ஞாயிறு, 28 ஜூன், 2015

எது தான் வளர்ச்சி ?

வாழ்க்கையின் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு விதமான வேறு வேறு அனுபவங்களை கொண்டதாக அமைந்துள்ளது.  ஆனால் எப்பொழுதும், எதிலும் இனிமை தரக்கூடியவை தான் விளையாட்டுக்கள். தொழில்நுட்ப மாற்றங்கள் பலவித மாற்றங்களை வாழ்க்கையில் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. தொழில்நுட்ப வசதி குறைவாக இருந்த காலத்தில் சிறு பருவத்தில் சந்தோஷமாக ஓடி, ஆடி விளையாடும் காலமாக கடந்து வந்ததாக இருந்தது. இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், இணையத்தள மற்றும் வீடியோ விளையாட்டுகள் பொழுது போக்காக கொள்ளும் நிலையே காணப்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் போன்றன பொழுது போக்காக விளையாடப்படுகின்ற விளையாட்டுக்கள் மீதான ஆர்வத்தை குறைப்பதாகவும், அவற்றிலிருந்து விலகி இருப்பதாகவும் இன்றைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தினை நோக்கிய பயம், எதிர்பார்ப்பு என்பன நிகழ்காலத்தில் எம்மை வாழவிடாததாக மாற்றி விட்டு இருக்கிறது.  
நிகழ்காலத்தில் திளைத்திருக்கும் இன்பத்தையும், நம்மை சூழ்ந்து உள்ள அழுத்தங்களில் இருந்து விடுதலையையும், பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பான அறிவாற்றலை பெருக்கவும், நிகழ்காலம் தொடர்பான அவதானத்தை வளர்ப்பதாகவும் இன்னும் பல எண்ணற்ற நன்மைகளை கொண்ட விளையாட்டுக்களை மறந்தவர்களாக வளர்ச்சி அடைந்த, இலகுவான உலகில் வாழ்பவர்களாக பரிணமித்துக் கொண்டிருக்கிறோம்........


"ஓடி விளையாடு பாப்பா - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. 
கூடி விளையாடு பாப்பா" 
- மகாகவி பாரதியார்.

செவ்வாய், 5 மே, 2015

சிந்தித்து பார்க்கிறேன்...............

சிந்தித்து பார்க்கிறேன்
சிந்தித்து பார்க்கிறேன்......
சிந்தனைகளின் பரிணாமங்கள் எத்தனை
சிந்தனைகளின் தோற்றங்கள் எத்தனை
சிந்தைகளின் கருக்கள் எத்தனை

எத்தனை எத்தனை பரிணாமங்களில்
எனது பரிணாமம் தனித்துவமானது
என்னுடைய பாதையை தருவது
எனக்கே எனக்கானது
என்னாலே உணரக் கூடியது......

உங்கள் பரிணாமம் வேறுபட்டது
உங்களுக்கே  உரியது
உங்கள் பாதையைத் தருவது
உங்கள் செயல்களைத் தருவது
உங்களை நெறிப்படுத்துவது

என் சிந்தனையில் நீங்களும்
உங்கள் சிந்தனையில் நானும்
நினைத்தாலே வேடிக்கையானது
நிஜத்தினை அழித்திடுவது
என்னை கொன்றிடுவது

என் சிந்தை
உங்களுக்கு இருப்பின்
நீங்கள் நானாவீர்கள்

உங்கள் சிந்தை
எனக்கு இருப்பின்
நான் நீங்களாவேன்

சிந்தித்து பார்க்கிறேன்
தனித்துவங்கள் அழிந்திடுமே

சிந்தித்து பார்க்கிறேன்
சிந்தித்து பார்க்கிறேன்
சிந்தனை குறித்து சிந்தித்து பார்க்கிறேன்...................



வியாழன், 18 செப்டம்பர், 2014

கலைந்திடதா கலைந்திட்ட கனவுகள்.......

சுயத்தை இழந்து
சுமை பல சுமந்து 
அயத்திடை சிறந்திட
அயராது உழைத்திடும்
அடிமைகளாய் நாம்

கனவுகள் காற்றோடு
சிந்தைகள் சிதையோடு
புதுமைகள் புற்றோடு
பதுமைகளாய் பற்றின்றி
மறைந்திடும் நாம்

புதுமை பேசிடின் பித்தன்
புயலிடை இயையுற்றவன் பக்தன்
புரிந்திடா அறிந்திடா
புண்ணியவான்களாய்
புவிதனில் நாம்

செவ்வாய், 3 ஜூன், 2014

தனிமையில் இனிமை தேடி........

இயற்கையுடன் பொழுதை கழிப்பதில் பிரியம் கொண்டவன் நான். நீண்ட நாட்களாக ஏதாவது தனியான அமைதியான இயற்கை இடத்தை நோக்கி பயணிக்க எண்ணி இருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை அது செயல் வடிவம் பெற்றது.

சற்றுத் தாமதமான பயணம் பெரிதான  எதிர்பார்ப்புக்கள், திட்டமிடல்கள் இல்லை. இடத்தை தெரிவு செய்தலும் பெரிய தேடல் ஏதும் இருக்கவில்லை, இலகுவான தெரிவு சிறிது நேர பேருந்து பயணம். வழமையான பேருந்து பயணங்களில் செய்வது போன்றே பாடல் கேட்பதற்காக கேட்பொறியை (Earphones, சரியான பதமா என்பது தெரியவில்லை இணையத்தில் இவ்வாறான பயன்பாடு காணப்படுகின்றது.) அணிந்து கொண்டு பாடல்களை தெரிவதில் பெரிய போராட்டத்தில் இறங்கினேன். மிகப் பெரிய போராட்டம் பெரும்பாலும் மென்மையான இசைப்பாடல்களை கேட்க விரும்புவன் நான், இருப்பினும் என் கைத்தொலைபேசியில் புதிய துள்ளல் பாடல்களும் உள்ளது. ஆக தெரிவு செய்ய வேண்டுமே மென்மையான பாடல்களை கேக்க. புதிதாய் ஒரு இசைப்பட்டியல் (Playlist) உருவாக்கிக் கொண்டேன், என் கைத்தொலைபேசியில் உள்ள 1998 - 2004 பகுதியில் வெளிவந்த பாடல்களை கொண்டதாய். பொதுவா காதல் பாடல்களையும் ரசிக்கும் எனக்கு அன்று என்னவோ ரசிக்க மனம் இல்லை. (காதலில் விளைந்த சோகமாய் கூட இருக்கலாம்). இசைப்பட்டியல் அமைத்த பின் கூட பாடல்கள் மாற்றுவது நின்ற பாடில்லை. அப்பொழுது ஒரு பாடல் மாற்றத்தில் இசைக்கிறது மனமும் அதனுடன் அசைகிறது. 
இயற்கையுடன் கூடிய பாடல், இயற்கையை நோக்கிய பயணத்தின் சரியான தெரிவு என்று மனமும் அமோதிக்கிறது. 

அந்தப் பாடலின் இனிய சிந்திக்க வைக்கும் வரிகள் முதலில்......

”மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...



மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...




இயற்கை தாயின் மடியை பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து
திரிந்து...பறந்து பறந்து...

மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...

தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...


சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்...
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,

அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.
தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல்யங்கள் காணேனோ...
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ...ஓ..
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளை பனித்துளி ஆகேனோ


மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...


உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது...

மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியுட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே...
மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ

சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...

மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...”



பாடல் வரிகள் மனதுடன் பேசுகின்றது. எப்படி இயற்கையை பிரிந்து வாழ்கிறாய் ???