வியாழன், 18 செப்டம்பர், 2014

கலைந்திடதா கலைந்திட்ட கனவுகள்.......

சுயத்தை இழந்து
சுமை பல சுமந்து 
அயத்திடை சிறந்திட
அயராது உழைத்திடும்
அடிமைகளாய் நாம்

கனவுகள் காற்றோடு
சிந்தைகள் சிதையோடு
புதுமைகள் புற்றோடு
பதுமைகளாய் பற்றின்றி
மறைந்திடும் நாம்

புதுமை பேசிடின் பித்தன்
புயலிடை இயையுற்றவன் பக்தன்
புரிந்திடா அறிந்திடா
புண்ணியவான்களாய்
புவிதனில் நாம்

செவ்வாய், 3 ஜூன், 2014

தனிமையில் இனிமை தேடி........

இயற்கையுடன் பொழுதை கழிப்பதில் பிரியம் கொண்டவன் நான். நீண்ட நாட்களாக ஏதாவது தனியான அமைதியான இயற்கை இடத்தை நோக்கி பயணிக்க எண்ணி இருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை அது செயல் வடிவம் பெற்றது.

சற்றுத் தாமதமான பயணம் பெரிதான  எதிர்பார்ப்புக்கள், திட்டமிடல்கள் இல்லை. இடத்தை தெரிவு செய்தலும் பெரிய தேடல் ஏதும் இருக்கவில்லை, இலகுவான தெரிவு சிறிது நேர பேருந்து பயணம். வழமையான பேருந்து பயணங்களில் செய்வது போன்றே பாடல் கேட்பதற்காக கேட்பொறியை (Earphones, சரியான பதமா என்பது தெரியவில்லை இணையத்தில் இவ்வாறான பயன்பாடு காணப்படுகின்றது.) அணிந்து கொண்டு பாடல்களை தெரிவதில் பெரிய போராட்டத்தில் இறங்கினேன். மிகப் பெரிய போராட்டம் பெரும்பாலும் மென்மையான இசைப்பாடல்களை கேட்க விரும்புவன் நான், இருப்பினும் என் கைத்தொலைபேசியில் புதிய துள்ளல் பாடல்களும் உள்ளது. ஆக தெரிவு செய்ய வேண்டுமே மென்மையான பாடல்களை கேக்க. புதிதாய் ஒரு இசைப்பட்டியல் (Playlist) உருவாக்கிக் கொண்டேன், என் கைத்தொலைபேசியில் உள்ள 1998 - 2004 பகுதியில் வெளிவந்த பாடல்களை கொண்டதாய். பொதுவா காதல் பாடல்களையும் ரசிக்கும் எனக்கு அன்று என்னவோ ரசிக்க மனம் இல்லை. (காதலில் விளைந்த சோகமாய் கூட இருக்கலாம்). இசைப்பட்டியல் அமைத்த பின் கூட பாடல்கள் மாற்றுவது நின்ற பாடில்லை. அப்பொழுது ஒரு பாடல் மாற்றத்தில் இசைக்கிறது மனமும் அதனுடன் அசைகிறது. 
இயற்கையுடன் கூடிய பாடல், இயற்கையை நோக்கிய பயணத்தின் சரியான தெரிவு என்று மனமும் அமோதிக்கிறது. 

அந்தப் பாடலின் இனிய சிந்திக்க வைக்கும் வரிகள் முதலில்......

”மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...



மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...




இயற்கை தாயின் மடியை பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து
திரிந்து...பறந்து பறந்து...

மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...

தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...


சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்...
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,

அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.
தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல்யங்கள் காணேனோ...
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ...ஓ..
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளை பனித்துளி ஆகேனோ


மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...


உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது...

மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியுட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே...
மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ

சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...

மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...”



பாடல் வரிகள் மனதுடன் பேசுகின்றது. எப்படி இயற்கையை பிரிந்து வாழ்கிறாய் ???
















செவ்வாய், 13 மே, 2014

என் பார்வையில் தனிமை.....

நான் நடந்து வந்த சுவடுகளை திரும்பிப் பார்க்கிறேன்.... எத்தனையோ மாற்றங்கள் ஆகி விட்டது. யாரும் அற்ற சூழலில் தனிமையை உணராத நிலையும் யாவரும் இருக்கும் பள்ளிக் கூட வகுப்பில் தனிமையாகவும் இருந்த பொழுதுகளை எண்ணிப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது. எத்தனையோ மாற்றங்கள் வாழ்க்கையில் வந்து விட்டது.
வகுப்பறையில் நண்பர்கள் விளையாடிய கிரிக்கற், வகுப்பில் விளையாடுதல் குற்றமே என்று விளையாடாத நான்......



திங்கள், 12 மே, 2014

கனவாகும் காதல்.....


காதலில் கலைந்திட்ட தனிமை.......



கண்ட கனவுகளும் 
கொண்ட கோலங்களும் 
கண் முன்னே காணல் நீராய் 

இடை இடையே சோகங்கள் 
அலை அலையாய் ஏக்கங்கள் 
கலைந்தும் கலையாததாய் நினைவுகள்.........